< Back
சினிமா செய்திகள்
டைரக்டருடன் வடிவேலு மோதலா?
சினிமா செய்திகள்

டைரக்டருடன் வடிவேலு மோதலா?

தினத்தந்தி
|
16 March 2023 8:31 AM IST

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருக்கும் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் இயக்குனருடன் ஏற்பட்ட மோதலால் அதில் தொடர்ந்து நடிக்க மறுத்து விலகினார். இதனால் அவருக்கு நடிக்க தடை விதிக்கப்பட்டது. சில வருடங்களாக நடிக்காமலேயே இருந்தார்.

கடந்த 2021-ல் தடை நீக்கப்பட்டு மீண்டும் நடிக்க வந்தார். நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் கதாநாயகனாக நடித்தார். உதயநிதியின் மாமன்னன் படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

இந்த நிலையில் பி.வாசு இயக்கத்தில் லாரன்ஸ் நடிக்கும் சந்திரமுகி 2-ம் பாகம் படத்திலும் நகைச்சுவை வேடத்தில் நடிக்க வடிவேலுவை ஒப்பந்தம் செய்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பில் வடிவேலுக்கும் பி.வாசுவுக்கும் இடையே ஒரு பிரச்சினையில் தகராறு ஏற்பட்டதாக வலைத்தளங்களில் பரபரப்பு தகவல் பரவி வருகிறது.

நடிக்க விருப்பம் இல்லாவிட்டால் சென்று விடலாம் என்று வடிவேலுவிடம் பி.வாசு கோபத்தோடு பேசியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனாலும் இந்த தகவலை இருவர் தரப்பிலும் உறுதிப்படுத்தவில்லை.

மேலும் செய்திகள்