< Back
சினிமா செய்திகள்
வெளியாகாத வடக்குப்பட்டி ராமசாமி டிரைலர்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சந்தானம்...!
சினிமா செய்திகள்

வெளியாகாத 'வடக்குப்பட்டி ராமசாமி' டிரைலர்... ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சந்தானம்...!

தினத்தந்தி
|
11 Jan 2024 9:44 PM IST

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு நேற்று வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது.

சென்னை,

நடிகர் சந்தானம் சமீபத்தில் வெளியான 'கிக்' படத்திற்கு பின்னர் 'டிக்கிலோனா' படத்தின் இயக்குனர் கார்த்திக் யோகியுடன் மீண்டும் கைக்கோர்த்துள்ளார்

பீப்பிள் மீடியா பேக்டரி தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். மேலும், இந்த படத்தில் மேகா ஆகாஷ், ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பிப்ரவரி 2-ம் தேதியன்று வெளியாகிறது.

இந்த படத்தின் டிரைலர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு நேற்று வீடியோ வெளியிட்டு அறிவித்திருந்தது. ஆனால் அறிவித்தபடி இன்று டிரைலர் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்நிலையில் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் சந்தானம் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் அந்த பதிவில், ''வடக்குப்பட்டி ராமசாமி' படத்தின் டிரைலருடன் மேலும் பல சிலிர்ப்பூட்டும் அப்டேட்டுகளுக்காக காத்திருங்கள். தாமதம் மதிப்புக்குரியது, மேலும் இந்த சிரமத்திற்கு நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். உற்சாகம் வந்து கொண்டிருக்கிறது - பெரிய வெளியீட்டிற்கு தயாராகுங்கள்!' என்று பதிவிடுள்ளார்.

மேலும் செய்திகள்