வாழை படம் உங்கள் ஆழ்மனதை தொடும்: இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ்
|வாழை திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
சென்னை,
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாழை'. இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 23-ந் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வாழை திரைப்படம் குறித்து இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், "'வாழை' படம் பற்றி எங்கே ஆரம்பித்து எது பற்றி பேசுவதென தெரியவில்லை. அவ்வளவு நெருக்கமாக இருந்தது. கதை மாந்தர்களைப் போல நாமும் ஒரு கனத்த இதயத்தோடுதான் வெளியே வருவோம். வாழை உங்கள் ஆழ்மனதை தொடும்" என்று தெரிவித்துள்ளார்.