< Back
சினிமா செய்திகள்
வாழை திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய ஆர்.ஜே.பாலாஜி
சினிமா செய்திகள்

'வாழை' திரைப்படம்: மாரி செல்வராஜை பாராட்டிய ஆர்.ஜே.பாலாஜி

தினத்தந்தி
|
28 Aug 2024 12:44 PM IST

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி வாழை திரைப்படத்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் பாராட்டி பேசியுள்ளார்.

சென்னை,

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'வாழை'. மாரி செல்வராஜ் தனது சிறுவயது வாழ்க்கையை மையப்படுத்தி இப்படத்தை உருவாக்கியுள்ளார். இப்படத்தில் நிகிலா விமல், திவ்யா துரைசாமி, 'வெயில்' படம் மூலம் பிரபலமான பிரியங்கா மற்றும் சில சிறுவர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 23-ந் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தன்னுடைய வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை வைத்து 'வாழை' படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பல பிரபலங்கள் மற்றும் இயக்குனர்கள் மாரி செல்வராஜுக்கு பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி 'வாழை' திரைப்படத்தையும், இயக்குனர் மாரி செல்வராஜையும் பாராட்டி பேசியுள்ளார். அதில் 'வாழை திரைப்படம் என்னை உலுக்கி எடுத்துவிட்டது, இவர் அதிர்ச்சியூட்டும் ஒரு வாழ்க்கையை படமாக தந்துள்ளார். இந்த அதிர்ச்சியிலிருந்து வெளியேற எனக்கு இன்னும் சில நாட்கள் ஆகலாம், இப்படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்' என்று கூறியுள்ளார். இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாரி செல்வராஜ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்