'வாடிவாசல்' படத்திற்காக சூர்யா மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட காட்சிகள் வெளியீடு..!
|பிறந்தநாளை முன்னிட்டு 'வாடிவாசல்' படத்திற்காக சூர்யா மாடுபிடி வீரர்களுடன் பயிற்சி மேற்கொண்ட காட்சிகளை படக்குழு வெளியிட்டுள்ளது.
சென்னை,
இயக்குனர் வெற்றி மாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் 'வாடிவாசல்'. 'ஜல்லிக்கட்டு' என்ற நாவலைத் தழுவி இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் சென்னையின் புறநகர்ப் பகுதியில் நடைபெற்ற இந்த படத்தின் டெஸ்ட் ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின.
இந்த நிலையில் தற்போது சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, வாடிவாசல் படத்திற்காக தன்னை தயார் படுத்திக்கொள்ள, மாடுபிடி வீரர்களுடன் நடிகர் சூர்யா பயிற்சி மேற்கொண்ட காட்சிகளை படக்குழு, வெளியிட்டுள்ளது.
மேலும் வீடியோவில், "இந்த வீடியோ சூர்யா மாடு பிடி வீரர்களிடமிருந்து ஏறுதழுவலின் நுட்பங்களை பயின்றபோது படம் பிடிக்கப்பட்ட காட்சிகளின் தொகுப்பு. வாடி வாசல் திரைப்படத்தின் டீசர் அல்ல" என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா முதன்முறையாக நடிக்கும் படம் என்பதால் வாடிவாசல் திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.