'உறியடி' விஜய்குமார் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு..!
|இந்த படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.
சென்னை,
'உறியடி' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஜய்குமார். இவர் தற்போது 'சேத்துமான்' புகழ் தமிழ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கதாநாயகிகளாக பிரீத்தி அஸ்ரானி மற்றும் ரிச்சா ஜோஷி ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் மூலம் ரிச்சா ஜோஷி தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார். மேலும், இந்த படத்தில் 'வத்திக்குச்சி' திலீபன், 'கைதி' ஜார்ஜ் மரியான், 'வடசென்னை' பாவல் நவகீதன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ரீல் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். மகேந்திரன் ஜெயராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சிஎஸ் பிரேம் குமார் படத்தொகுப்பு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தொடர்ந்து 62 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தது.
ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் விரைவில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தொடங்கும் என்று அறிவித்துள்ளனர். படப்பிடிப்பு நிறைவடைந்ததை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழுவினர் இது தொடர்பான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.