< Back
சினிமா செய்திகள்
தமிழ் படத்தில் நடிக்க விரும்பும் உபேந்திரா
சினிமா செய்திகள்

தமிழ் படத்தில் நடிக்க விரும்பும் உபேந்திரா

தினத்தந்தி
|
14 March 2023 7:59 AM IST

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா. இவர் தற்போது 'கப்ஜா' என்ற பெயரில் தயாராகி உள்ள கன்னட படத்தில் நடித்து இருக்கிறார். இதில் சுதீப், சிவராஜ்குமார், ஸ்ரேயா ஆகியோரும் நடித்துள்ளனர். சந்துரு டைரக்டு செய்துள்ளார். இந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து பான் இந்தியா படமாக வெளியிடுகிறார்கள்.

இதுகுறித்து உபேந்திரா கூறும்போது, "விரைவில் நேரடியாக தமிழ் படத்தில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன். கப்ஜா படம் இயக்குனர் சந்துருவின் நான்கு வருட கனவு. படத்தின் டிரெய்லரில் உழைப்பு தெரிகிறது. இந்த படம் தமிழகமெங்கும் வெளியாக இருக்கிறது'' என்றார்.

நடிகை ஸ்ரேயா கூறும்போது, "சென்னை எப்போதும் எனக்கு ஸ்பெஷலாக இருக்கும். இந்த கப்ஜா என்ற எனது மனதிற்கு நெருக்கமான ஒரு படத்துடன் நான் இப்போது மீண்டும் வந்திருக்கிறேன். உபேந்திரா போன்ற ஒரு அற்புதமான நடிகருடன் திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி'' என்றார்.

மேலும் செய்திகள்