உபேந்திரா - சுதீப் இணைந்து நடிக்க 7 மொழிகளில் தயாராகும் படம்
|கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களான உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் கதையின் நாயகர்களாக இணைந்து நடித்துள்ள படம், ‘கப்ஜா'.
கன்னட திரையுலகில் இருந்து 'கே.ஜி.எப்.', '777 சார்லி', 'விக்ராந்த் ரோணா' என பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரான படைப்புகள் வெளியாகி வெற்றி பெற்றதால், திரையுலகின் கவனம் தற்போது கன்னட திரையுலகின் மீது திரும்பி இருக்கிறது. அங்கு நட்சத்திர நடிகர் களாக உலா வருபவர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் 'கப்ஜா' படத்திற்கு இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
அதற்கேற்ற வகையில், இந்த திரைப்படம் கன்னடத்தில் மட்டும் அல்லாமல் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், மராத்தி, ஒரியா என 7 இந்திய மொழிகளில் வெளியாகிறது.
ஆர். சந்திரசேகர் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப்புடன் நடிகை ஸ்ரேயா சரண், முரளி ஷர்மா, ஜான் கொக்கேன், நவாப் ஷா, பிரகாஷ் ராஜ், ஜகபதி பாபு, கோட்டா சீனிவாச ராவ், கபீர் துஹான் சிங், பொமன் இரானி, சுதா, தேவ் கில், எம். காமராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகளை ரவி வர்மா, விஜய், விக்ரம் மோர், வினோத் என 4 சண்டைப் பயிற்சி இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள். கன்னட திரை உலகின் முன்னணி இயக்குனரான ஆர். சந்துரு இயக்கத்தில் படம் தயாராகி இருக்கிறது. இதைப் பற்றி இயக்குநர் பேசுகையில், "1947-ம் ஆண்டில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் ஒருவர் கொடூரமாக தாக்கப்படுகிறார். அவருடைய மகன் தவிர்க்கமுடியாத காரணங்களால் மாபியா கும்பலிடம் சிக்கிக் கொள்கிறார். அதன் பிறகு என்ன நடந்தது? என்பதை விறுவிறுப்பாக சொல்லியிருக்கும் படைப்புதான், 'கப்ஜா'.