< Back
சினிமா செய்திகள்
கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்... புதிய திரைப்படம் குறித்து நாளை அறிவிப்பு
சினிமா செய்திகள்

கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அப்டேட்... புதிய திரைப்படம் குறித்து நாளை அறிவிப்பு

தினத்தந்தி
|
8 March 2023 7:13 PM IST

ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 56-வது படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்னை,

நடிகர் கமல்ஹாசன் 'ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல்' என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் மூலம் கமல்ஹாசன் பல படங்களை தயாரித்து வருகிறார். கடந்த ஆண்டு ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இந்த தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 56-வது படம் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6.30 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகள்