< Back
சினிமா செய்திகள்
போகுமிடம் வெகுதூரமில்லை படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
சினிமா செய்திகள்

'போகுமிடம் வெகுதூரமில்லை' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்

தினத்தந்தி
|
19 Aug 2024 9:52 PM IST

நடிகர் விமல் மற்றும் கருணாஸ் நடித்துள்ள படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.

சென்னை,

நடிகர் விமல் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம், 'போகுமிடம் வெகுதூரமில்லை'. அறிமுக இயக்குனர் மைக்கேல் கே.ராஜா இயக்கியுள்ள இந்த படத்தில் மெரி ரிக்கெட்ஸ் நாயகியாக நடித்துள்ளார். மேலும், ஆடுகளம் நரேன், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஷார்க் 9 பிக்சர்ஸ் சார்பில் சிவா கில்லாரி தயாரித்துள்ள இந்த படத்திற்கு டெமில் சேவியர் எட்வர்ட்ஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார். மேலும் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமாவின் வழக்கமான படமாக இல்லாமல் ஒரு வித்தியாசமான படமாக உருவாக்கியுள்ளார் இயக்குனர் மைக்கேல் கே ராஜா. இந்த படத்தில் கருணாஸ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் விமல் அமரர் ஊர்தி ஓட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல் வெளியாகி கவனம் பெற்றது. இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, வருகிற 23-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்