மாளவிகா மோகனன் நடித்துள்ள 'யுத்ரா' படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட்
|மாளவிகா மோகனன் சித்தாந்த் சதுர்வேதியுடன் இணைந்து 'யுத்ரா' என்ற படத்தில் நடித்துள்ளார்.
சென்னை,
மலையாள திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், தமிழில் 'பேட்ட', 'மாஸ்டர்' 'மாறன்' போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். சமீபத்தில் விக்ரம் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் 'தங்கலான்' படத்தில் தனது அற்புதமான நடிப்பை வெளிகாட்டியுள்ளார்.
இதற்கிடையில் இவர், சித்தாந்த் சதுர்வேதியுடன் இணைந்து 'யுத்ரா' என்ற ஆக்சன் திரில்லர் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தினை கிரைம் திரில்லர் படமான 'மாம்' என்ற படத்தை இயக்கிய ரவி உத்யவார் இயக்கியுள்ளார். இப்படத்தை பர்ஹான் அக்தர் மற்றும் ரித்தேஷ் சித்வானியின் எக்செல் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது. மேலும் இந்த படத்தில் ரவி அர்ஜுன், ராகவ் ஜூயல், ஷில்பா சுக்லா, ராம் கபூர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
தற்போது, இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவலை தயாரிப்பாளர் ரவி உத்யவார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, வருகிற செப்டம்பர் மாதம் 20-ந் தேதி திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது.