பா.ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தின் அப்டேட்
|இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னை,
'அட்டகத்தி', 'மெட்ராஸ்' திரைப்படங்கள் மூலம் கவனம் ஈர்த்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து 'கபாலி', 'காலா' ஆகிய படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக உயர்ந்தவர் பா.ரஞ்சித். தற்போது அவர் நடிகர் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை இயக்கியுள்ளார். கோலார் தங்க சுரங்கத்தில் தமிழர்கள் பட்ட துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இயக்குனராக மட்டுமின்றி நீலம் புரொடக்சன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி சமூக அக்கறை கொண்ட திரைப்படங்களையும் பா.ரஞ்சித் தயாரித்து வருகிறார். இதுவரை நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம், 'பரியேறும் பெருமாள்', 'இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு', 'ரைட்டர்', 'புளூ ஸ்டார்', 'ஜே பேபி' உள்ளிட்ட படங்களை அவர் தயாரித்துள்ளார்.
இந்த நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட்லுக் போஸ்டர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து போஸ்டர் ஒன்றை வெளியிட்டு நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. மகிழ்ச்சி, பரவசம் மற்றும் பொழுதுபோக்கு நிரம்பிய எமோஷனல் ரோலர்கோஸ்டராக இந்த படம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.