சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே23' படம் குறித்த அப்டேட்
|ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'எஸ்கே23' படத்தின் அப்டேட் வெளியாக உள்ளது.
சென்னை,
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான 'அயலான்' திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் 'எஸ்கே 23' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் காஷ்மீரில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மணி வசந்த் நடிக்கிறார். இப்படத்தில் வில்லனாக பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். மேலும் அனிருத் இசையமைக்கிறார்.
இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஓரளவு நிறைவடைந்துள்ள நிலையில், இந்த மாத இறுதிக்குள் 80 சதவீதம் நிறைவடையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வருகிற 2025-ல் பொங்கலுக்கு திரையிடப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாக உள்ளது. அதன்படி, இன்று மாலை 5.49 மணியளவில் அப்டேட் வெளியிடப்படும் என்று ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் 'எஸ்கே 23' படத்தின் தலைப்பு அல்லது போஸ்டர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.