< Back
சினிமா செய்திகள்
பிரித்விராஜ் இயக்கும் லூசிபர்-2 எம்புரான் படத்தின் அப்டேட்..!
சினிமா செய்திகள்

பிரித்விராஜ் இயக்கும் 'லூசிபர்-2 எம்புரான்' படத்தின் அப்டேட்..!

தினத்தந்தி
|
13 Nov 2023 1:18 AM IST

‘லூசிபர்-2 எம்புரான்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

மலையாள நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் கடந்த 2019-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'லூசிபர்'. இந்த படத்தின் மூலம் பிரித்விராஜ் இயக்குனராக அறிமுகமானார். மோகன்லால் கதாநாயகனாக நடித்திருந்த இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இந்த படத்தின் 2-ம் பாகம் தயாராகி வருகிறது. இந்த படத்திற்கு 'லூசிபர்-2 எம்புரான்' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் செய்திகள்