< Back
சினிமா செய்திகள்
விரைவில் உருவாகும் மரகத நாணயம் - 2 - உறுதி செய்த இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன்
சினிமா செய்திகள்

விரைவில் உருவாகும் மரகத நாணயம் - 2 - உறுதி செய்த இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன்

தினத்தந்தி
|
27 July 2023 11:15 PM IST

மரகத நாணயம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழில் ஆதி, நிக்கி கல்ராணி நடிப்பில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'மரகத நாணயம்'. இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. ஃபேண்டஸி காமெடி படமாக உருவான இந்த படத்தை ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் தயாரித்திருந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் தெரிவித்துள்ளார். மேலும், முதல் பாகத்தை தயாரித்த ஆக்சஸ் ஃபிலிம் ஃபேக்டரி இந்த பாகத்தை தயாரிக்கவுள்ளதாகவும் விரைவில் ஹீரோ, ஹீரோயின் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

இயக்குனர் ஏ.ஆர்.கே.சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் 'வீரன்' திரைப்படம் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்