ஆர்.ஆர்.ஆர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரல்
|ராம் சரண் இடம்பெற்ற ஆர்.ஆர்.ஆர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
சென்னை,
ராஜமவுலி இயக்கத்தில் ஜுனியர் என்.டி.ஆர், ராம் சரண், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து சூப்பர் ஹிட்டான படம், 'ஆர்ஆர்ஆர்'. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில், கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி வெளியான இந்தப் படம், ரூ.1,150 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
இதில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் குளோப் மற்றும் ஆஸ்கர் விருதுகளை வென்றது. இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படத்தின் நீக்கப்பட்ட காட்சி ஒன்று இணையத்தில் பரவி உள்ளது. இந்த காட்சியில் ராம் சரண் இடம்பெற்றிருக்கிறார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
நேற்று, சினிமாவில் ராஜமவுலியின் பங்களிப்பை கூறும் விதமாக, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் பிலிம் கம்பானியன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்த "மார்டர்ன் மாஸ்டர்ஸ் (modern masters)" என்ற ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.