< Back
சினிமா செய்திகள்
இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகள்.. கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்..!
சினிமா செய்திகள்

இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகள்.. கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் படத்தின் அப்டேட்..!

தினத்தந்தி
|
26 Oct 2023 11:40 PM IST

கமல்ஹாசன்-மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

சென்னை,

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' திரைப்படம் கடந்த 1987-ம் ஆண்டு வெளியானது. அந்த படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்களில் ஒன்றாக உள்ளது. இதன் பிறகு சுமார் 35 ஆண்டுகள் கழித்து தற்போது மணிரத்னம்-கமல்ஹாசன் கூட்டணியில் ஒரு புதிய படம் உருவாகிறது.

இந்தப் படத்தை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், ரெட் ஜெயன்ட் இணைந்து தயாரிக்கின்றன. ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவி கே.சந்திரன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் தொடங்க இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முன்னோட்ட காட்சி வரும் நவம்பர் 7-ந்தேதி கமல்ஹாசன் பிறந்தநாளில் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் 'எக்ஸ்' சமூக வலைதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், 'இந்திய சினிமாவின் ஒருங்கிணைந்த சக்திகள்... கொண்டாட்டம் தொடங்கட்டும்' என்று பதிவிடப்பட்டுள்ளது.



மேலும் செய்திகள்