< Back
சினிமா செய்திகள்
உள்ளுக்குள்ள தீக்காடு - அடியே படத்தின் புதிய பாடல் வெளியானது..!
சினிமா செய்திகள்

'உள்ளுக்குள்ள தீக்காடு' - அடியே படத்தின் புதிய பாடல் வெளியானது..!

தினத்தந்தி
|
20 Aug 2023 9:58 PM IST

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள 'அடியே' திரைப்படத்தின் புதிய பாடல் வெளியாகி உள்ளது.

சென்னை,

ஏண்டா தலையில எண்ண வெக்கல, திட்டம் இரண்டு போன்ற படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள திரைப்படம் 'அடியே'. இந்த படத்தில் வெங்கட் பிரபு, கவுரி, மிர்சி விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மாலி மற்றும் மன்வி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. மல்டிவெர்ஸ் அறிவியல் புனைவு திரைப்படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் 'உள்ளுக்குள்ள தீக்காடு' என்ற புதிய பாடலின் லிரிக் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மாதேவன் எழுதியுள்ள இந்த பாடலை ரோமி, பத்மஜா சீனிவாசன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்