< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
'பிரின்ஸ்' படத்தின் படப்பிடிப்பை முடித்தார் நடிகை மரியா ரியாபோஷப்கா
|21 Aug 2022 9:24 PM IST
நடிகை மரியா ரியாபோஷப்கா 'பிரின்ஸ்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'பிரின்ஸ்' திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என 2 மொழிகளில் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன் நாட்டைச் சேர்ந்த மரியா ரியாபோஷப்கா நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமன் இசையமைக்கும் இந்த படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் நடிகை மரியா ரியாபோஷப்கா 'பிரின்ஸ்' படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.