உதயநிதியின் 'மாமன்னன்' படத்தின் பாடல்கள் வெளியீடு
|இந்த பாடல்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்
பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் 'மாமன்னன்' படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் மலையாள நடிகர் பகத் பாசில், நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. நாளுக்கு நாள் 'மாமன்னன்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. 'மாமன்னன்' படத்தில் நடிகர் வடிவேலுவின் மெல்லிய குரலில் முதல் பாடல் 'ராசா கண்ணு' வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நிலையில் ஏ.ஆர்.ரகுமானின் துள்ளலான குரலில் வெளியாகி உள்ள 'ஜிகு ஜிகு ரெயில்' பாடலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் தற்போது நடைபெற்று வருகிறது அதில் படத்தின் அனைத்து பாடல்கள் வெளியாகியுள்ளன. இந்த பாடல்களை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
The heart of #MAAMANNAN, the songs are out now.
— Red Giant Movies (@RedGiantMovies_) June 1, 2023
Listen to #Isaipuyal's magic here ➡️ https://t.co/4B6h7RJhuL@mari_selvaraj @Udhaystalin @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva @dhilipaction @MShenbagamoort3… pic.twitter.com/eD4Xj4D8Sa