< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்
மகிழ்திருமேனி டைரக்ஷனில், உதயநிதி
|12 Aug 2022 4:22 PM IST
மகிழ் திருமேனி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கலகத் தலைவன்’ படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'நெஞ்சுக்கு நீதி' உள்பட பல படங்களை தயாரித்துள்ள உதயநிதி ஸ்டாலின் அடுத்து, ஒரு படம் தயாரிக்கிறார். மகிழ்திருமேனி டைரக்டு செய்கிறார். இந்த படம், பெயர் சூட்டப்படாமல் வளர்ந்து வந்தது. இப்போது படத்துக்கு, 'கலகத் தலைவன்' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
'தடம்' வெற்றி படத்தை இயக்கிய மகிழ் திருமேனி, 'சைக்கோ', 'நெஞ்சுக்கு நீதி' ஆகிய வெற்றி படங்களில் நடித்த உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரும் முதன்முதலாக இணையும் படம், இது. இவர்கள் இருவரின் கூட்டணி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருப்பதாக பேசப்படுகிறது.
படத்தின் கதாநாயகியாக நிதி அகர்வால் நடிக்கிறார். அரோல் கரோலி இசையமைக்க, கே.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிக்க, இணை தயாரிப்பு: எம்.செண்பகமூர்த்தி, ஆர்.அர்ஜுன் துரை.