உதயநிதியின் 'மாமன்னன்' படத்தின் புதிய பாடல் வெளியீடு
|'நெஞ்சமே நெஞ்சமே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது
'கர்ணன்' படத்தை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் படம் 'மாமன்னன்'. இப்படத்தின் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதில், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், இப்படத்தில், இடம்பெற்றுள்ள 'நெஞ்சமே நெஞ்சமே' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 'சிட்டுக்குருவிகளை நோக்கி அச்சிறுவன் வீசியெறிந்த கல்லில் வந்தமர்ந்தது மணிப்புறா' என்று தொடங்கும் இந்த பாடலின் வரிகளை யுகபாரதி எழுதியுள்ளார். விஜய் யேசுதாஸ் மற்றும் சக்தி ஸ்ரீ கோபாலன் இணைந்து பாடியுள்ள இந்த பாடலின் லிரிக் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து ட்ரெண்டாகி வருகிறது.
இன்று தான் விண்ணிலே பாய்கிறேன்...
— Red Giant Movies (@RedGiantMovies_) June 2, 2023
வெண்ணிலா வெளிச்சத்தில் காய்கிறேன்...
நெஞ்சமே நெஞ்சமே...
The magical #NenjameNenjame lyric video in @IAMVIJAYYESUDAS @ShakthisreeG's voices is out now ➡️ https://t.co/ldm9uoE6v1#MAAMANNAN @mari_selvaraj @Udhaystalin @arrahman #Vadivelu… pic.twitter.com/QXX57XVVhZ