< Back
சினிமா செய்திகள்
அமீரக அரசு கவுரவம்: நடிகை லதாவுக்கு கோல்டன் விசா
சினிமா செய்திகள்

அமீரக அரசு கவுரவம்: நடிகை லதாவுக்கு கோல்டன் விசா

தினத்தந்தி
|
24 May 2023 6:46 AM IST

ஐக்கிய அரபு அமீரக அரசு பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களை கவுரவிக்க கோல்டன் விசா வழங்கி வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகள் ஐக்கிய அமீரகத்தின் குடிமகன்களாக கருதப்படுவார்கள்.

ஏற்கனவே நடிகர்கள் கமல்ஹாசன், சரத்குமார், பார்த்திபன், விஜய்சேதுபதி, நாசர், நடிகைகள் திரிஷா, மீனா, காஜல் அகர்வால், மீரா ஜாஸ்மின், பாவனா, இந்தி நடிகர்கள் ஷாருக்கான், சஞ்சய்தத், மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால், பிருதிவிராஜ், துல்கர் சல்மான் உள்ளிட்ட பலர் கோல்டன் விசா பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் மூத்த நடிகை லதா தற்போது கோல்டன் விசா பெற்றுள்ளார். திரையுலகில் ஐம்பது ஆண்டு சாதனைகளை கவுரவிக்கும் வகையில் இந்த விசாவை வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்