< Back
சினிமா செய்திகள்
விஜய் ஆண்டனி நடித்துள்ள மழை பிடிக்காத மனிதன் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி நடித்துள்ள 'மழை பிடிக்காத மனிதன்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

தினத்தந்தி
|
25 Jun 2024 7:58 PM IST

'மழை பிடிக்காத மனிதன்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

'ரோமியோ' படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி நடித்துள்ள திரைப்படம் 'மழை பிடிக்காத மனிதன்'. விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் சரத்குமார், சத்யராஜ், டாலி தனஞ்சயா, முரளி ஷர்மா, மேகா ஆகாஷ், தலைவாசல் விஜய், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பிருத்வி அம்பெர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை இன்பினிட்டி பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படத்துக்கு விஜய் ஆண்டனி, அச்சு ராஜாமணி, ராய், வாகு மாசான், ஹரி டபுசியா ஆகியோர் இசையமைத்துள்ளனர். இந்த படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது. இதையடுத்து இந்த படத்தின் அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் இந்த படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாக படக்குழு இன்று அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


மேலும் செய்திகள்