'எலக்சன்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
|'எலக்சன்' திரைப்படம் வரும் 17ம் தேதி வெளியாகவுள்ளது.
சென்னை,
'சேத்துமான்' படத்தை இயக்கிய இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எலக்சன்' எனும் திரைப்படத்தில் விஜய்குமார், 'அயோத்தி' புகழ் பிரீத்தி அஸ்ராணி, ரிச்சா ஜோஷி, 'வத்திக்குச்சி' திலீபன், பாவெல் நவகீதன், ஜார்ஜ் மரியம், நாச்சியாள் சுகந்தி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
எழுத்தாளர் அழகிய பெரியவன் வசனம் எழுதி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு மகேந்திரன் ஜெயராஜு ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த் வசந்தா இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை ஏழுமலை கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை சி.எஸ். பிரேம்குமார் கையாண்டிருக்கிறார்.வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் அரசியலை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ரீல் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆதித்யா தயாரித்திருக்கிறார். 'எலக்சன்' திரைப்படம் வரும் 17ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில், 'எலக்சன்' படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
#ELECTIONMovie is now censored U/A! Get ready for the ultimate political entertainer hitting screens this Friday! Don't miss out on the excitement and drama! #ELECTIONfromMay17 #ELECTION #RGF02@Vijay_B_Kumar @reelgood_adi #GovindVasantha @reel_good_films #Thamizh pic.twitter.com/rHW3x5LVnM
— Reel Good Films (@Reel_Good_Films) May 14, 2024