ஒரே கதையில் இரண்டு படங்கள்...ஒன்று இந்தியாவின் சிறந்த படம், மற்றொன்று பாக்ஸ் ஆபிஸில் தோல்வி
|ஒரே கதையில் உருவான இரண்டு படங்களில் ஒன்று இந்தியாவின் சிறந்த படமாகவும் மற்றொன்று தோல்வி படமாகவும் உள்ளது.
சென்னை,
ஒரே கதை மற்றும் கதாபாத்திரங்களைக் கொண்ட இரண்டு படங்களை கற்பனை செய்து பாருங்கள். அதில் ஒன்று பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி, மற்றொன்று இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்று.
இந்த படங்கள் ராமாயணம் காவியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட படங்கள். இவற்றில் ஒன்று ராமாயணம்: தி லெஜண்ட் ஆப் பிரின்ஸ். இது கடந்த 1993-ம் ஆண்டு வெளியான அனிமேஷன் படமாகும். இந்த படம் ஐஎம்டிபி மதிப்பீட்டில் 9.2 ரேட்டிங்கைப் பெற்று இந்தியாவின் சிறந்த படங்களில் ஒன்றாக உள்ளது. கொய்ச்சி சசாகி மற்றும் ராம் மோகன் ஆகியோரால் இயக்கப்பட்ட இப்படத்திற்கு வனராஜ் பாட்டியா இசையமைத்திருந்தார்.
இரண்டாவது படம் ஓம் ரவுத் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஆதிபுருஷ் . சுமார் ரூ. 450 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படத்தில் பிரபாஸ், சைப் அலி கான், கிருத்தி சனோன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். முதல் நாளில் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்த போதிலும் முடிவில் ரூ.393 கோடி மட்டுமே வசூலிக்க முடிந்தது. இதன் மூலம் பாக்ஸ் ஆபிஸில் ஆதிபுருஷ் தோல்வி அடைந்தது.