< Back
சினிமா செய்திகள்
டி.வி. நடிகையுடன் பசங்க பட நடிகர் கிஷோர் திருமணம்
சினிமா செய்திகள்

டி.வி. நடிகையுடன் 'பசங்க' பட நடிகர் கிஷோர் திருமணம்

தினத்தந்தி
|
25 March 2023 9:13 AM IST

பாண்டிராஜ் இயக்கத்தில் சிறுவர்களை மையமாக வைத்து 2009-ல் வெளியான பசங்க படத்தில் அன்புக்கரசு கதாபாத்திரத்தில் நடித்தவர் கிஷோர். இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. துரோகி, கோலி சோடா, நெடுஞ்சாலை, சகா உள்ளிட்ட படங்களிலும் நடித்து இருக்கிறார். சமீபத்தில் டி.வி. நடிகை பிரீத்தி குமாருடன் கிஷோருக்கு காதல் மலர்ந்துள்ளதாக தகவல்கள் பரவின. இருவரும் ஜோடியாக சுற்றும் புகைப்படங்களை வெளியிட்டு காதலை உறுதிப்படுத்தி வந்தனர். பிரீத்தி குமார் வானத்தைபோல, கேளடி கண்மணி, தெய்வம் தந்த வீடு, பிரியமானவள், வள்ளி உள்ளிட்ட தொடர்களில் நடித்து இருக்கிறார்.

இந்த நிலையில் கிஷோர், பிரீத்தி குமார் திருமணம் சென்னையில் நடந்தது. திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள், தொலைக்காட்சி நடிகர்-நடிகைகள் பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர். கிஷோர்- பிரீத்தி குமார் திருமண புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகிறது.

மேலும் செய்திகள்