< Back
சினிமா செய்திகள்
கவனம் ஈர்க்கும் திரிஷா படத்தின் பாடல்..!
சினிமா செய்திகள்

கவனம் ஈர்க்கும் திரிஷா படத்தின் பாடல்..!

தினத்தந்தி
|
31 Dec 2022 10:24 PM IST

இந்நிலையில், 'ராங்கி' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ராங்கிக்காரி' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது

சென்னை,

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி, வலியவன் படங்களை இயக்கி பிரபலமடைந்தவர் இயக்குனர் எம்.சரவணன். இவர் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவான திரைப்படம் 'ராங்கி'. இப்படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பிவைத்தனர். படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் நிறைய சர்ச்சை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபம் தெரிவித்து அனுமதி வழங்க மறுத்துவிட்டனர்.

இதையடுத்து படத்தை மேல்முறையீட்டு குழுவுக்கு கொண்டு சென்றனர். அங்கும் குறிப்பிட்ட காட்சிகளை நீக்கினால்தான் அனுமதி தர முடியும் என்று தெரிவித்து விட்டனர். இதையடுத்து படத்தில் இடம்பெற்ற அமெரிக்கா, டாலர், லிபியா, ரா உளவு அமைப்பு, எப்.பி.ஐ உள்ளிட்ட பெயர்கள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு தணிக்கை குழு 'யுஏ' சான்றிதழ் வழங்கியது.

இதைத்தொடர்ந்து இப்படம் நேற்று (டிசம்பர் 30) திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், 'ராங்கி' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள 'ராங்கிக்காரி' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.


Related Tags :
மேலும் செய்திகள்