18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் இணையும் திரிஷா
|கடந்த 2006ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஸ்டாலின்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. இவர் நடிப்பில் வெளியான 'வால்டர் வீரய்யா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
இதைத்தொடர்ந்து சிரஞ்சீவியின் 156-வது படத்தை இயக்குனர் மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார். இந்த படத்திற்கு 'விஷ்வம்பாரா' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்றது.
இப்படத்தை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. பிரமாண்டமாக உருவாகும் இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்க சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் 2025-ஆம் ஆண்டு வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'விஷ்வம்பாரா' திரைப்படத்தில் நடிகை திரிஷா இணைந்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படத்தை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும், 18 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிரஞ்சீவியுடன் நடிக்கவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2006ம் ஆண்டு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான 'ஸ்டாலின்' என்ற தெலுங்கு திரைப்படத்தில் திரிஷா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.