2-ம் பாகத்தில் நடிக்க விரும்பும் திரிஷா
|தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் வெற்றி பெற்ற படங்களின் 2-ம் பாகங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் திரிஷாவும் தெலுங்கில் வெளியான 'ஆடவாரி மாடலருகு அர்தாலே வேருலே' படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து உள்ளார்.
இந்த படம் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி 2007-ல் திரைக்கு வந்தது. இதில் வெங்கடேஷ் ஜோடியாக திரிஷா நடித்து இருந்தார். படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் தனுஷ், நயன்தாரா ஜோடியாக நடிக்க யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் ஆனது. தமிழிலும் படத்துக்கு வரவேற்பு கிடைத்தது.
2013-ல் டுவிட்டரில் செல்வராகவன் வெளியிட்ட பதிவில் ஆடவாரி மாடலருகு அர்தாலே வேருலே படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க தயார் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அந்த பதிவு வெளியாகி 10 வருடங்களுக்கு பிறகு தற்போது திரிஷா, "ஆடவாரி மாடலருகு அர்தாலே வேருலே 2-ம் பாகத்தில் நடிக்க நான் தயாராக இருக்கிறேன்'' என்று பதில் அளித்து இருக்கிறார். எனவே இந்த படத்தின் 2-ம் பாகம் உருவாகலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.