< Back
சினிமா செய்திகள்
Trisha shares Matta song BTS glimpses from  THE GOAT
சினிமா செய்திகள்

'தி கோட்': 'மட்ட' பாடலின் படப்பிடிப்பு புகைப்படத்தை பகிர்ந்த திரிஷா

தினத்தந்தி
|
6 Sept 2024 1:14 PM IST

'தி கோட்' படத்தில் வரும் 'மட்ட' பாடலுக்கு திரிஷா நடனமாடியிருந்தார்.

சென்னை,

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் படம் 'தி கோட்'. இப்படத்தில் விஜய்யுடன், பிரபு தேவா, பிரசாந்த், மோகன், சினேகா, மீனாட்சி சவுத்ரி, லைலா, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தில் விஜய் அப்பா மற்றும் மகன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார். இதில் மகன் கதாபாத்திரத்தில் வரும் விஜய்யின் வயதை குறைத்து காட்டுவதற்காக டீஏஜிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், திரிஷா இப்படத்தில் வரும் 'மட்ட' பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

இந்நிலையில், 'மட்ட' பாடலின் படப்பிடிப்பு புகைப்படங்களை திரிஷா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிவகார்த்திகேயனும் இப்படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்