புனிதமான காலைப்பொழுது... திரிஷா பகிர்ந்த புகைப்படம் - இணையத்தில் வைரல்
|'விஸ்வம்பரா' படத்தில் திரிஷா இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.
சிரஞ்சீவி ஜோடியாக நடிகை திரிஷா 'விஸ்வம்பரா' என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். 18 வருடங்களுக்குப் பிறகு இருவரும் சேர்ந்து நடிக்கின்றனர். பேன்டசி திரில்லர் பாணியில் உருவாகும் 'விஸ்வம்பரா' படத்தை மல்லிடி வசிஷ்டா இயக்குகிறார்.
யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் முக்கியத்துவம் கொண்ட இரண்டு வேடங்களில் திரிஷா நடிக்கிறார். மீனாட்சி சவுத்ரி மற்றொரு நாயகியாகவும் சுரபி, இஷா சாவ்லா, ஆஷிகா ரங்கநாத், சிரஞ்சீவிக்கு சகோதரிகளாகவும் நடிக்கின்றனர். இப்படம் 2025-ம் ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், நடிகை திரிஷா, 'விஸ்வம்பரா' படத்தின் நாயகன் சிரஞ்சீவி மற்றும் இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டது போல் தெரிகிறது. படத்தின் இசை குறித்த உரையாடலின்போது எடுக்கப்பட்ட புகைப்படமாக இருக்கலாம்.
அந்தப் பதிவில் திரிஷா "உண்மையில் ஒரு புனிதமான மற்றும் அற்புதமான காலைப்பொழுது" என்று தெரிவித்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.
புனிதமான காலைப்பொழுது... திரிஷா பகிர்ந்த புகைப்படம் - இணையத்தில் வைரல்