விஜய் நடிக்கும் 'கோட்' படத்தில் திரிஷா.? வெளியான தகவல்
|நடிகர் விஜய் தற்போது 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து, படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் கேரளாவில் எடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த நிலையில், கோட் படத்தில் திரிஷா கேமியோ ரோலில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய்க்கும் திரிஷாவுக்கும் இடையிலான படப்பிடிப்பு காட்சிகள் ரகசியமாக நடந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், ஒரு பாடலுக்கு விஜய்யுடன் திரிஷா இணைந்து நடனமாடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், படத்தில் திரிஷாவும் நடிப்பதாக வெளியான தகவலை படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை.