உண்மை சம்பவம் கதையில் திரிஷா
|திரிஷா 'தி ரோட்' என்ற படத்தில் நடிக்கிறார். 'பொன்னியின் செல்வன்' படத்துக்கு பிறகு இந்த படத்தை திரிஷா பெரிதும் எதிர்பார்க்கிறார். இதில் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தை அருண் வசீகரன் டைரக்டு செய்கிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, ''மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களை மையமாக வைத்து படம் உருவாகி உள்ளது'' என்றார். இந்த படத்தை அதிக பொருட்செலவில் எடுத்துள்ளனர். படத்தின் டீசர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது.
இந்த படத்துக்காக திரிஷா மற்றும் படக்குழுவினர் மதுரை மற்றும் அதை சுற்றி உள்ள மலைகள், காடுகள் என்று கடுமையான இடங்களுக்கு சென்று படப்பிடிப்பில் பங்கேற்று உள்ளனர். படத்தை அடுத்த மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டு உள்ளனர். இசை:சாம் சி.எஸ். ஒளிப்பதிவு: கே.ஜி. வெங்கடேஷ்.