உண்மை சம்பவம் கதையில் திரிஷா
|`பொன்னியின் செல்வன்' படத்துக்கு பிறகு திரிஷா நடிப்பில் தயாராகி உள்ள படம் `தி ரோட்'. இதில் சபீர், சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா, லட்சுமி பிரியா, செம்மலர் அன்னம், வினோத், நேகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை அருண் வசீகரன் டைரக்டு செய்துள்ளார். படம் பற்றி அவர் கூறும்போது, ``இந்த திரைப்படம் மதுரையில் நடந்த சில உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவம் கதை என்பதால் படம் முழுவதும் திரிஷா மேக்கப் இல்லாமல் நடித்ததோடு, அச்சம்பவங்கள் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று எந்த சமரசமும் இல்லாமல் நடித்திருப்பது படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது'' என்றார்.
`சவுத் குயின்' என்கிற பட்டத்தை முதல் முறையாக `தி ரோட்' பட குழுவினர் திரிஷா பெயருடன் இணைத்து வெளியிட்டுள்ளனர். இது திரிஷா ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இசை: சாம் சி.எஸ். ஒளிப்பதிவு: கே.ஜி.வெங்கடேஷ்.