< Back
சினிமா செய்திகள்
7 படங்களில் திரிஷா
சினிமா செய்திகள்

7 படங்களில் திரிஷா

தினத்தந்தி
|
7 Jun 2023 7:07 AM IST

பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பிறகு திரிஷாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது 7 படங்கள் அவர் கைவசம் வைத்து இருப்பதாக தகவல். திரிஷா நடிப்பில் சதுரங்க வேட்டை 2, தி ரோடு படங்கள் ஏற்கனவே முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது. இது தவிர கவுரவ் நாராயணன் இயக்கும் படம் மற்றும் விடாமுயற்சி படத்தில் அஜித் ஜோடியாகவும், தனுஷின் 50-வது படத்திலும், மணிரத்னம் இயக்கும் படத்தில் கமல்ஹாசனுடனும் நடிக்க திரிஷாவிடம் பேசி உள்ளனர்.

தமிழில் பிசியான நடிகையாக திரிஷா மாறி இருக்கிறார். வெப் தொடர் ஒன்றிலும் நடிக்கிறார். மலையாளத்திலும் ஒரு படம் கைவசம் உள்ளது.

மேலும் செய்திகள்