< Back
சினிமா செய்திகள்
நேஷனல் கிரஷ்...நான் மிகவும் அதிர்ஷ்டசாலி... - நடிகை திரிப்தி டிம்ரி
சினிமா செய்திகள்

நேஷனல் கிரஷ்...'நான் மிகவும் அதிர்ஷ்டசாலி...' - நடிகை திரிப்தி டிம்ரி

தினத்தந்தி
|
30 Jun 2024 1:30 PM IST

நடிகை திரிப்தி டிம்ரி 'பேட் நியூஸ்'படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

மும்பை,

பிரபல பாலிவுட் நடிகை திரிப்தி டிம்ரி. இவர் 'கபீர் சிங்' படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளிவந்த 'அனிமல்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் ரூ.550 கோடிக்கு மேல் வசூல் செய்தது. இப்படத்திற்கு பிறகு இவரை 'நேஷனல் கிரஷ்' என்று ரசிகர் அழைத்து வருகின்றனர். விரைவில் இவர் நடித்துள்ள 'பேட் நியூஸ்' படம் திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மும்பையில் நடந்த இவ்விழாவில் திரிப்தி டிம்ரி கலந்து கொண்டார். அப்போது 'நேஷனல் கிரஷ்' என்று அழைக்கப்படுவது குறித்து நடிகை திரிப்தி டிம்ரி கூறுகையில்,

'நான் முதலில் கடவுளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏனெனில், நான் சினிமாவிற்கு வந்தபோது, மக்கள் எனது நடிப்பைப் பற்றி பேச வேண்டும் என்று எப்போதும் விரும்பினேன். தற்போது வெளியான படங்களினால் பார்வையாளர்களிடமிருந்து நிறைய அன்பைப் பெற்றுள்ளேன், மக்கள் எனது நடிப்பை விரும்புகிறார்கள்.

அதுதான் என்னை வாழ்க்கையில் சிறப்பாகச் செயல்படவும் தொடர்ந்து பணியாற்றவும் தூண்டுகிறது என்று நான் நினைக்கிறேன். அந்த வகையில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி,' என்றார்.

மேலும் செய்திகள்