< Back
சினிமா செய்திகள்
Tripti Dimri wanted to marry this Bollywood actor
சினிமா செய்திகள்

இந்த நடிகரை திருமணம் செய்ய விரும்பிய திரிப்தி டிம்ரி

தினத்தந்தி
|
16 Sept 2024 9:01 AM IST

'அனிமல்' படத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை திரிப்தி டிம்ரி.

மும்பை,

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிப்தி டிம்ரி. கடந்த 2017-ம் ஆண்டு வெளிவந்த திரில்லர் படமான 'மாம்' திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்த ஆண்டு வெளியான 'லைலா மஜ்னு'வில் கதாநாயகியாக அறிமுகமானார்.

சமீபத்தில், ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான 'அனிமல்' படத்தில் நடித்து புகழ் பெற்றார். அதனைத்தொடர்ந்து, விக்கி கவுசல் ஜோடியாக 'பேட் நியூஸ்' படத்தில் நடித்திருந்தார். இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது, ராஜ்குமார் ராவுடன் இணைந்து 'விக்கி வித்யா கா வோ வாலா வீடியோ' என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் அடுத்த மாதம் 11-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், நடிகை திரிப்தி டிம்ரி தனது முதல் பாலிவுட் கிரஸ் குறித்து வெளிப்படுத்தினார். அவர் கூறுகையில் 'அது ஷாருக்கான். எனக்கு 5 அல்லது 6 வயது இருக்கும். நான் அவரை திருமணம் செய்து கொள்ளப் போகிறேன் என்று என் குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் கூறினேன்', என்றார்.

மேலும் செய்திகள்