< Back
சினிமா செய்திகள்
Tripti Dimri roped in for a special dance number in Pushpa 2
சினிமா செய்திகள்

புஷ்பா 1-ல் சமந்தா, புஷ்பா 2-ல் திரிப்தி டிம்ரியா? - வெளியான தகவல்

தினத்தந்தி
|
24 May 2024 1:19 PM IST

புஷ்பா 2-ல் நடிகை திரிப்தி டிம்ரி சிறப்பு தோற்றத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை,

அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'புஷ்பா தி ரைஸ்'. இந்த படம் அனைத்து மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ.400 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது. அதேசமயம், இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்களும் ரசிகர்களிடம் பெரிதும் கவனம் பெற்றன.

இந்த படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. 'புஷ்பா 2 தி ரூல்' என்ற தலைப்பில் உருவாகி வரும் இந்த படம் ஆகஸ்ட் 15-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் 'புஷ்பா 2 தி ரூல்' படத்தின் 'புஷ்பா புஷ்பா' என்ற முதல் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது. தற்போது படத்தின் இரண்டாவது பாடலான 'சூசெகி' வருகிற 29-ந்தேதி காலை 11.07 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகை திரிப்தி டிம்ரி சிறப்பு தோற்றத்தில் பாடல் ஒன்றிற்கு நடனமாட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'புஷ்பா' படத்தின் முதல் பாகத்தில் 'ஊ சொல்றியா' பாடலுக்காக சமந்தா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். இப்போது, இரண்டாம் பாகத்தில் திரிப்தி டிம்ரி சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்