< Back
சினிமா செய்திகள்
Transformers One Trailer: Chris Hemsworth-Scarlett Johanssons Animated Film Is A Cinematic Treat
சினிமா செய்திகள்

வைரலாகும் 'டிரான்ஸ்பார்மர்ஸ் ஒன்' படத்தின் 2-வது டிரெய்லர்

தினத்தந்தி
|
27 July 2024 1:22 PM IST

அனிமேஷன் படமான 'டிரான்ஸ்பார்மர்ஸ் ஒன்' படத்தின் 2-வது டிரெய்லர் வெளியாகி உள்ளது.

சென்னை,

அமெரிக்க அனிமேஷன் அறிவியல் புனைகதையை அடிப்படையாக கொண்டது 'டிரான்ஸ்பார்மர்ஸ் ஒன்' திரைப்படம். இப்படத்தினை இயக்குனர் ஜோஷ் கூலி இயக்கி உள்ளார். இத்திரைப்படத்தில் ஸ்கார்லெட் ஜோஹன்சன், கீகன்-மைக்கேல் கீ, ஸ்டீவ் புஸ்செமி, லாரன்ஸ் பிஷ்பர்ன் மற்றும் ஜான் ஹாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இடம்பெற்றுள்ளனர். இது டிரான்ஸ்பார்மர்ஸ் திரைப்படத் தொடரின் 8-வது படமாகும்.

இந்த நிலையில் கடந்த ஏப்ரல் 18-ந் தேதி இப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அதனை தொடர்ந்து நேற்று 'டிரான்ஸ்பார்மர்ஸ் ஒன்' படத்தின் 2-வது டிரெய்லர் வெளியாகியுள்ளது. தற்போது இந்த டிரெய்லர் வைரலாகி வருகிறது.

இது, லைவ்-ஆக்சன் டிரான்ஸ்பார்மர்ஸ் திரைப்படங்களைப் போல இல்லாமல், ரோபோக்கள் பிறப்பிலிருந்தே போருக்கு எப்படி தயாராகி வருகிறது என்பதை அடிப்படையாக கொண்டுள்ளது. இந்தப் படம் ஒரு புதிய கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. 2டி, 3டி, 4டி மற்றும் ஐமேக்ஸ் வடிவங்களில் 'டிரான்ஸ்பார்மர்ஸ் ஒன்' திரைப்படம் இந்தியாவில் வருகிற செப்டம்பர் 20-ந் தேதி ஆங்கிலம் மற்றும் இந்தியில் வெளியாக உள்ளது.

மேலும் செய்திகள்