< Back
சினிமா செய்திகள்
வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் அனல் மேலே பனித்துளி படத்தின் டிரையிலர் வெளியீடு
சினிமா செய்திகள்

வெற்றிமாறன் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிக்கும் 'அனல் மேலே பனித்துளி' படத்தின் டிரையிலர் வெளியீடு

தினத்தந்தி
|
4 Nov 2022 7:49 PM IST

நடிகை ஆண்ட்ரியா நடித்துள்ள ‘அனல் மேலே பனித்துளி’ படத்தின் டிரையிலர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.

சென்னை,

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன், இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இவர் தயாரிப்பில் 'உதயம் என்எச்4', தனுஷின் 'கொடி' உள்ளிட்ட பல படங்கள் வெளியாகியுள்ளன.

இதனைத் தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் தயாரிப்பில் 'அனல் மேலே பனித்துளி' படம் உருவாகியுள்ளது. கெய்சர் ஆனந்த் எழுதி இயக்கியுள்ள இந்த படத்தில், நடிகை ஆண்ட்ரியா கதாநாயகியாக நடித்துள்ளார். படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் வரும் 18-ந்தேதி ஓ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரையிலரை நடிகர் விஜய் சேதுபதி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தற்போது 'அனல் மேலே பனித்துளி' படத்தின் டிரையிலருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.



மேலும் செய்திகள்