< Back
சினிமா செய்திகள்
விஜய் சேதுபதியின் 50வது படமான மகாராஜா பட டிரெய்லர் நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

image courtesy: @VijaySethuOffl

சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' பட டிரெய்லர் நாளை வெளியாகும் - படக்குழு அறிவிப்பு

தினத்தந்தி
|
29 May 2024 6:30 AM GMT

விஜய் சேதுபதியின் 50வது படமான 'மகாராஜா' பட டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

சென்னை,

விஜய் சேதுபதியின் 50 -வது படமாக 'மகாராஜா' படம் உருவாகி வருகிறது. குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நிதிலன் சாமிநாதன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரிக்கின்றனர்.

இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்டி, முனிஷ்காந்த், சிங்கம் புலி, பாரதிராஜா, வினோத் சாகர், பி.எல்.தேனப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர், சில மாதங்களுக்கு முன் வெளியானது. அதில் இதுவரை கண்டிராத அவதாரத்தில் விஜய் சேதுபதியின் தோற்றம் அமைந்திருந்தது. ஒரு சலூனுக்குள் ஆழ்ந்த சிந்தனையில் காயங்களுடன் விஜய் சேதுபதி அமர்ந்துள்ள அந்த போஸ்டர் ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.

மேலும், இந்த படத்தில் அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து காட்சிப்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிகிறது. இந்த படம் குறித்து முக்கிய அறிவிப்பு இன்று காலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படம் குறித்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்