< Back
சினிமா செய்திகள்
பார்த்திபனின்  டீன்ஸ் பட டிரைலர் வெளியானது
சினிமா செய்திகள்

பார்த்திபனின் 'டீன்ஸ்' பட டிரைலர் வெளியானது

தினத்தந்தி
|
7 April 2024 5:05 PM IST

பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘டீன்ஸ்’ படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

சென்னை,

இயக்குநர் பார்த்திபன் இயக்கத்தில் உருவாகி உள்ள 'டீன்ஸ்' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. வித்தியாசமான கதைக்களம் மூலம் கவனம் ஈர்க்கும் பார்த்திபன் இந்தப் படத்திலும் தனது தனித்துவத்தை வெளிப்படுத்தி உள்ளார். பார்த்திபன் தற்போது குழந்தைகளை மையப்படுத்திய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்துக்கு 'டீன்ஸ்' (Teenz) என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். பயஸ்கோப் யு.எஸ்.ஏ மற்றும் அகிரா புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது. காவெமிக்அரி ஒளிப்பதிவு செய்கிறார். ஆர்.சுதர்சன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார்.

ஒரு பள்ளியில் படிக்கும் நண்பர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரியாமல் ஒரு குழுவாக காட்டுக்குள் செல்கின்றனர். அந்த காட்டில் நடக்கும் சில மர்மமான விஷயங்கள், பேய்கள் நடமாட்டம் ஆகியவற்றை பார்த்து பயந்த அவர்கள் எப்படி அங்கிருந்து வெளியேறுவது என்று தெரியாமல் தவிக்கின்றனர்.

காட்டில் சிக்கிய மாணவ மாணவிகளின் நிலை என்ன என்பதை திரில் மற்றும் சஸ்பென்ஸ் உடன் பார்த்திபன் வழங்கியுள்ள படம் தான் 'டீன்ஸ்'. பொதுவாக பேய் படம் என்றாலே பழிவாங்கல் படமாகவும் கடந்த சில ஆண்டுகளாக காமெடி படமாகவும் மாறியுள்ள நிலையில் உண்மையாகவே ஒரு பயத்தை வரவழைக்கும் பேய் படத்தை இயக்கிய பார்த்திபனுக்கு நிச்சயம் பாராட்டுக்கள் குவியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்