< Back
சினிமா செய்திகள்
விதார்த், பூர்ணா நடித்துள்ள டெவில் படத்தின் டிரைலர் வெளியானது..!
சினிமா செய்திகள்

விதார்த், பூர்ணா நடித்துள்ள 'டெவில்' படத்தின் டிரைலர் வெளியானது..!

தினத்தந்தி
|
5 Nov 2023 6:13 AM IST

'டெவில்' படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார்.

சென்னை,

'சவரக்கத்தி' படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'டெவில்'. இந்த படத்தில் விதார்த், பூர்ணா, ஆதித் அருண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மாருதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். எஸ். இளையராஜா படத்தொகுப்பு செய்கிறார்.

இந்த படத்தின் மூலம் இயக்குனர் மிஷ்கின் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்