சந்தானம் நடிக்கும் "கிக்" திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு
|சந்தானம் நடிக்கும் "கிக்" திரைப்படம் செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
சென்னை,
பிரபல கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கிக்' படத்தில் நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னடம் என இருமொழிப் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் தன்யா ஹோப், ராகினி திவிவேதி இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
பார்டியூன் பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் நவீன்ராஜ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அர்ஜுன் ஜனயா இசையமைத்துள்ளார். சுதாகர் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகூரன் ராமச்சந்திரன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இப்படத்திற்கு தணிக்கை குழு சமீபத்தில் யு/ஏ சான்றிதழ் வழங்கியது.
'கிக்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரெய்லரை சந்தானம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.
Kick Release trailer out now In theatres From September 1https://t.co/0ghNM80VMS#Kickfromseptember1A @iamprashantraj film @TanyaHope_offl @iamnaveenraaj @Fortune_films @johnsoncinepro @saregamasouth pic.twitter.com/XyRcoFJZlT
— Santhanam (@iamsanthanam) August 17, 2023