< Back
சினிமா செய்திகள்
விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் அறிவிப்பு..!
சினிமா செய்திகள்

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் அறிவிப்பு..!

தினத்தந்தி
|
2 Sept 2023 3:18 PM IST

விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

சென்னை,

திரிஷா இல்லனா நயன்தாரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. இந்த படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் விஷால் இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் மூன்று பாடல்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன.

இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகும் தேதியை படக்குழு அறிவித்து உள்ளது. அதன்படி 'மார்க் ஆண்டனி' படத்தின் டிரைலர் நாளை (செப்டம்பர் 3) வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனை போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அறிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்