< Back
சினிமா செய்திகள்
போக்குவரத்து விதிமீறல்: ரூ.500 அபராதம் செலுத்திய நடிகர் விஜய்..!
சினிமா செய்திகள்

போக்குவரத்து விதிமீறல்: ரூ.500 அபராதம் செலுத்திய நடிகர் விஜய்..!

தினத்தந்தி
|
12 July 2023 12:05 PM IST

நடிகர் விஜய் சென்ற கார் போக்குவரத்து விதிகளை மீறியதால் ரூ.500 அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

சென்னை,

நடிகர் விஜய் நேற்று பனையூர் விஜய் மக்கள் நல இயக்க அலுவகத்தில் 234 தொகுதி நிர்வாகிகளுடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதற்காக நீலாங்கரையில் இருந்து பனையூருக்கு விஜய் காரில் சென்றார். அப்போது அக்கரை பகுதி சிக்னலில் நடிகர் விஜயின் கார் நிற்காமல் சென்றது வீடியோ காமிராவில் பதிவானது.

சிக்னலை மதிக்காமல் விஜயின் கார் சென்றதாக புகார் எழுந்த நிலையில், நடிகர் விஜய்க்கு 500 ரூபாய் அபராதம் விதித்து சென்னை போக்குவரத்து காவல்துறையினர் நடிகர் விஜய்க்கு ரசீது அனுப்பியுள்ளனர். இதையடுத்து போக்குவரத்து விதிமீறலுக்கான ரூ.500 அபராத தொகையை நடிகர் விஜய், ஆன்லைன் மூலம் செலுத்தினார்.

ஏற்கெனவே, காரில் கருப்புக் கண்ணாடி ஒட்டியதற்காக நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்