வதந்திகளுக்கு விளக்கமளித்த டாக்சிக் பட தயாரிப்பாளர்
|'டாக்சிக்' படத்தில் கரீனா கபூர், சாய் பல்லவி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் நடிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின.
மும்பை,
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக உள்ளவர் யாஷ். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான கே.ஜி.எப் 1 மற்றும் 2ம் பாகம் படங்கள் இவரை உலக அளவில் பிரபலமடைய செய்தது. இந்நிலையில் நடிகர் யாஷ் தனது 19வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு 'டாக்ஸிக்' என பெயரிடப்பட்டுள்ளது. மேலும், இந்த படம் 2025ம் ஆண்டு ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், இப்படத்தில் கரீனா கபூர், சாய் பல்லவி, ஸ்ருதி ஹாசன் உள்ளிட பல்வேறு பிரபலங்கள் நடிப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின.
இந்நிலையில், படத்தில் நடிப்பவர்கள் குறித்து பரவும் வதந்திகள் குறித்து படத்தின் தயாரிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'டாக்சிக் படத்தை குறித்தும் அதில் நடிக்கும் நடிகர்கள் குறித்தும் பல்வேறு வதந்திகள் பரவுகின்றன. ரசிகர்களுக்கு படத்தின் மீது உள்ள ஆர்வம் பாராட்டக்குறியது. அதேசமயம், அறிவிக்கும் முன்பே இவ்வாறு தகவல்களை பரப்புவதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இப்படத்திற்கான நடிகர்கள் தேடும் பணிகள் முடிவடைய உள்ளன. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும்'.என்றார்.