< Back
சினிமா செய்திகள்
சினிமா செய்திகள்

டோவினோ தாமஸின் 'ஏஆர்எம்' படத்தின் டிரெய்லர் வெளியானது

தினத்தந்தி
|
26 Aug 2024 2:56 PM IST

டோவினோ தாமஸ் நடித்த ‘அஜயந்தே ரண்டம் மோஷனம்’ படத்தின் தமிழ் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டோவினோ தாமஸ், மாரி, மின்னல் முரளி உள்ளிட்ட திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். விதவிதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடிக்கும் டோவினோ தாமஸூக்கு மலையாள ரசிகர்கள் மட்டுமில்லாமல், தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது இவர், 'அஜயந்தே ரண்டம் மோஷனம்' படத்தில் மூன்று விதமான கெட்டப்பில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு கடந்த அக்டோபர் மாதம் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. இந்த படத்தை சுஜீத் நம்பியார் எழுத்தில் அறிமுக இயக்குநர் ஜித்தின் லால் இயக்கி உள்ளார்.

டோவினோ தாமஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். இந்தப் படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகிறார் கீர்த்தி ஷெட்டி. இவர்களைத் தவிர்த்து பாசில் ஜோசப், ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, ரோகினி, ஹரிஷ் உத்தமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார்.


இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தமிழ்நாட்டின் காரைக்குடியை ஒட்டிய பகுதிகளில் படமாக்கப்பட்டன. 1900, 1950, 1990 ஆகிய மூன்று காலக்கட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், தனுஷ் நடித்த மாரி படத்தின் மூலம் நம் மனதில் இடம் பிடித்த டோவினோ தாமஸ் 3 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இப்படம் மலையாளம் தவிர தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளிலும் பான் இந்தியத் திரைப்படமாக வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.

மேலும் செய்திகள்