< Back
சினிமா செய்திகள்
1000-க்கும் அதிகமான திரைகளில்  வெளியான நடிகர் திரைப்படம்
சினிமா செய்திகள்

1000-க்கும் அதிகமான திரைகளில் வெளியான 'நடிகர்' திரைப்படம்

தினத்தந்தி
|
3 May 2024 4:50 PM IST

பிரபல நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் 'நடிகர்' திரைப்படம் 1000-க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது.

தென்னிந்தியளவில் கவனம்பெற்ற நடிகராக இருப்பவர் டோவினோ தாமஸ். மாயநதி, மின்னல் முரளி, 2018, தள்ளுமலா உள்ளிட்ட படங்களில் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.தற்போது, நடிகர் லாலின் மகனும் இயக்குநருமான லால் ஜூனியர் (ஜீன் லால்) இயக்கத்தில் நடிகர் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார்.முதலில் இப்படத்திற்கு நடிகர் திலகம் எனப் பெயரிட்டிருந்தனர். ஆனால், மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் அடைமொழி என்பதால் பின்பு இப்பெயர் மாற்றப்பட்டது.

சமீபத்தில், படத்தின் டிரைலர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், இன்று உலகம் முழுவதும் 1000க்கும் அதிகமான திரைகளில் வெளியாகியுள்ளது. சாதாரண குடும்பப் பின்னணியிலிருந்து சூப்பர் ஸ்டாராகும் நடிகரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது. மலையாளப் படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றுவரும் நிலையில் இந்தப் படத்தின் மீதும் பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கின்றன.

டேவிட் படிக்கல் கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டாராக நடித்துள்ளார் டோவினோ தாமஸ்.

மேலும் செய்திகள்